டெஸ்ட்க்கு கோலி, ODIக்கு ரோஹித் - இந்திய அணி அறிவிப்பு!

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - Rajadurai Kannan | Last Updated : Dec 8, 2021, 07:51 PM IST
டெஸ்ட்க்கு கோலி, ODIக்கு ரோஹித் - இந்திய அணி அறிவிப்பு!

பிசிசிஐ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு, தேபாஷிஷ் மொகந்தி மற்றும் அபே குருவில்லா ஆகியோருடன் இணைந்து ரோஹித் சர்மாவை புதிய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக அறிவித்தது. இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவுக்கு பதிலாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ IPL Auction 2022 ஏலத்தில் பண மழையால் மூழ்கவிருக்கும் இந்திய வீரர்கள்

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. ஓமிக்ரான் வைரஸால் இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செல்லாது என்ற தகவல் பரவியது. ஆனால் பிசிசிஐ அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இந்திய தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் என்று அறிவித்தது.  ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டுமே தற்போது நடக்கும் என்றும் டி20 போட்டிகள் பின்னால் நடைபெறும் என்றும் அறிவித்தது. 

 

இந்திய அணி வீரர்கள் ஜடேஜா, அக்சார் படேல், இஷாந்த் சர்மா, கில் ஆகியோர் காயத்தில் அவதி பட்டும் வரும் நிலையில் அவர்கள் அணியில் இடம் பெறுவார்களா என்ற சந்தேகம் நிலவியது.  இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் அணியில் இஷாந்த் சர்மா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.  மற்ற மூன்று பேருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 26ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.  

அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (VC), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ஆர் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ்.

கூடுதல் வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்சான் நாக்வாஸ்வாலா.

ALSO READ ஜடேஜா, ஷுப்மான் கில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News