புதுடெல்லி: 15வது ஐபிஎல் போட்டிகளில் இந்த இந்திய வீரர்களின் மேல் பண மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மூத்த வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலம் தொடங்க இன்னும் அதிக நாட்கள் இல்லை. ஜனவரி முதல் வாரத்தில் இந்த மெகா ஏலம் நடைபெறலாம். ஐபிஎல்லின் அனைத்து 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்கும். இந்த ஆண்டு பல இந்திய வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்பார்கள். கோடிக்கணக்கான ரூபாயில் ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று கருதப்படும் சில இந்திய வீரர்கள் இவர்கள்...
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் (KL Rahul) இந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் வீரராக இருப்பார். க்னோ அணி கேஎல் ராகுலை கேப்டனாக்க விரும்புவதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஐபிஎல் 2022 போட்டித்தொடரில் (IPL Auction 2022) அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகளும் அறிமுகமாகின்றன. இரு அணிகளும் தத்தமது அணிகளுக்கு கேப்டனை தேடி வருவதால், தற்போதைய வீரர்களில் ராகுலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
ALSO READ | IPL 2022 Auction: ஐபில் ஏலத்தில் இந்த வீரர்களுக்கு மவுசு இருக்காது?
ஷ்ரேயாஸ் ஐயர்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்க விரும்புவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் என்ன விலை கொடுத்தாவது மும்பையைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயரை அவர்களுடன் சேர்க்க விரும்புகிறது. எனவே, ஐயரின் விலையை மும்பை இந்தியன்ஸ் அணி பல கோடி ரூபாய் அதிகமாக்கும் என்று கூறப்படுகிறது.
ஷிகர் தவான்
ஷிகர் தவான், கடந்த சீசன் வரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்தவர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சீசனில் அதிக ரன்களை எடுத்தவர். ஹைதராபாத் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ள ஷிகர் தவானை டெல்லி அணி தக்கவைக்கவில்லை. ஆனால், ஷிகர் தவானை வாங்க பல அணிகளுக்கு இடையே போட்டி இருக்கிறது.
யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) யுஸ்வேந்திர சாஹலை தக்கவைக்கவில்லை. முன்னாள் கேப்டன் விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி) ஆகியோரை ஆர்சிபி தக்க வைத்துக் கொண்டது. பல அணிகளின் பார்வை சாஹல் மீது இருப்பதால், அவருக்கு மவுசு அதிகமாகவே இருக்குக்ம்.
ராகுல் சாஹர்
ஹர்திக் பாண்டியா
தனது வலுவான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஹர்திக் பாண்டியாவை வாங்க, பல ஐபிஎல் அணிகள் விரும்புகின்றன. ஹர்திக் 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இந்த முறை அவரை அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ராகுல் சாஹர் மீதும் பல உரிமையாளர்களின் பார்வை இருக்கும். கடந்த இரண்டு சீசன்களாக ராகுல் அற்புதமாக பந்துவீசி வரும் ராகுல் சாஹர், பல அணிகளின் விருப்பத் தெரிவாக இருப்பார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாடி வரும் தீபக் சாஹரும் இந்த ஏலத்தில் கணிசமான தொகையை பெறலாம். சாஹர் தொடக்க ஓவரில் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தற்கு பிரபலமானவர்.
READ ALSO | ’பஞ்சாப் கிங்’ ஹர்பஜன் விரைவில் ஓய்வை அறிவிக்கிறார்? நெக்ஸ்ட் பிளான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR