வர்மா திரைப்பட நாயகன் துருவ் விக்ரம் தனது முதல் திரைப்பட சம்பளத்தினை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோலிவுட் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி கண்ட திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".


இந்த படம் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகின்றார். இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகின்றது.


பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.



சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேர்பினை பெற்றுள்ள நிலையில் இப்பட நாயகன் துருவ் விக்ரம் தான் பெற்ற முதல் படம் சம்பளம் முழுவதினையும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்!