நமது உடம்பிலுள்ள தசைகளை நாம் இயக்கும்போது அதிலிருந்து வெளியாகும் ஒருவித கழிவுப்பொருள் தான் கிரியாட்டினைன் ஆகும்.  உடலின் தசைநார்களை பொறுத்தும், அவற்றின் பயன்பாட்டை பொறுத்தும் இது நமது உடலில் குறிப்பிட்ட அளவில் உற்பத்தியாகிறது.  இது நமது உடலில் தானாகவே உற்பத்தியாகிறது, இதனை நமது உடலில் உள்ள ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்தெடுத்து சிறுநீரக வெளியேற்றுகிறது.  சிறுநீரகங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு அதன் தன்மை குறையும்போது இது சரியாக கிரியாட்டினைனை வடிகட்ட தவறுவதால் இது உடலில் தங்கிக்கொண்டு ரத்தத்தில் கிரியாட்டினைன் அளவு அதிகரிக்க தொடங்குகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி


இதுபோன்று ரத்தத்தில் கிரியாட்டினைன் அளவு அதிகரிப்பது சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.  இதன் அளவு பெண்களை விட பெரும்பாலும் ஆண்களிடம் தான் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.  இது ஆண்களுக்கு 0.6 முதல் 1.2 mg/dL, பெண்களுக்கு 0.5 முதல் 1.1 mg/dL, டீனேஜர்களுக்கு 0.5 முதல் 1.0 mg/dL மற்றும் குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 mg/dL என்ற அளவில் இருப்பது நல்லது.  நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அதிகமாக உள்ளது, அத்தகையோர் அன்றாடம் ஆரோக்கியமான சில 5 பழக்கங்களை தவறாமல் கடைபிடிப்பதன் கிரியாட்டினைன் அளவை சரியான விகிதத்தில் பராமரித்துக்கொள்ள முடியும்.  தற்போது இதனை கட்டுக்குள் கொண்டுவர என்னென்ன செய்யவேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்,


மேலும் படிக்க | ஊறவைத்த முந்திரியில் உள்ளன உடலுக்கான எக்கச்சக்க நன்மைகள்


1) ஒருவர் புரதசத்து நிறைந்த உணவுகளை அதிகப்படியான உட்கொண்டால் அவர்களது ரத்தத்தில் கிரியாட்டினைன் அளவு அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஆனால் உங்கள் உடலுக்கு எந்த அளவிற்கு புரத உணவுகள் தேவை என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு அதன்படி சாப்பிடலாம்.


2) நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள் அல்லது பருப்பு வகைகள் போன்ற வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.  நார்சத்து நிறைந்த பொருட்களை உண்ணுவது பலவேறு பாதிப்புகளால் இருந்து நம்மை பாதுகாக்கிறது, அதனால் இதனை அதிகமாக உணவில் நீங்கள் சேர்த்து கொண்டால் கிரியாட்டினைன் அளவு கட்டுக்குள் இருக்கும்.


3) சிறுநீரக நோய் இருப்பவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் திரவத்தின் அளவில் கவனம் செலுத்த வேண்டும்.  நீங்கள் தினமும் எவ்வளவு தண்ணீர் மற்றும் பிற திரவங்களை குடிக்க வேண்டும், எப்போது குடிக்க வேண்டும் என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்ள வேண்டும்.


4) புகைபிடிப்பது பல்வேறு நோய்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது.  இது உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை உண்டாக்குகிறது.  புகைபிடிப்பதை நிறுத்துவது சிறுநீரக நோயின் அபாயத்தைக் குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள கிரியாட்டினைன் அளவையும் குறைக்கிறது


5) நீரிழிவு நோய் இருப்பவர்கள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும், கிரியாட்டினைன் அளவைக் குறைக்கவும் விரும்பினால், கிரியாட்டினைன் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக்கொள்ள கூடாது.  நீரிழிவு னாய் மற்றும் கிரியாட்டினைன் அளவு அதிகமாக இருப்பவர்கள் உடல்நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR