திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வைகுந்தம் மற்றும் தேவி ஆகியோரின் மகன் கார்த்திக்.  இவர் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் வேதியல் பாடப்பிரிவில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வருகிறார்.  மாணவன் கார்த்திக் பாலிதீன் பைகளை வைத்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று தனது ஆராய்ச்சியை தொடங்கியுள்ளார். தொடர்ந்து  கல்லூரியின் செய்முறை தேர்வுக்காக பாலிதீன் பைகளை வைத்து இயற்கையான முறையில் பெட்ரோல் தயாரிக்க வேண்டும் என்று தனது ஆய்வில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு உபகரணங்களை வைத்து செயல்முறை வடிவில் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற 5 வயது குழந்தை பலி


இறுதியில் குறைந்தளவு மைக்ரான் கொண்ட பாலிதீன் பைகளை டப்பாக்களில் அடைத்து வைத்து குறிப்பிட்ட டெம்பரேச்சர் அளவு சூடு ஏற்றி அதன் மூலம் பெட்ரோலை பிரித்தெடுத்தார்.  முன்னதாக தந்தையின் இருசக்கர வாகனத்தில் முதல் ஆய்வை தொடங்கி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் இந்தவகை பெட்ரோலை பயன்படுத்தும் நிலையில் இன்ஜினுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கார்த்தி கூறுகிறார்.



எளிய குடும்பத்தில் பிறந்தாலும் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் உதவியால் பாலிதீன் பையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சி மாணவன் கார்த்திக் தெரிவித்தார்.  மேலும் தமிழக அரசு தான் கண்டுபிடித்த பெட்ரோலின் தரத்தை ஆய்வு செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் ஆய்வு மாணவர் கார்த்திக் கோரிக்கை வைத்து வருகிறார்.


மேலும் படிக்க | உலக தரம் வாய்ந்ததாக மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR