திண்டுக்கல் லியோனி தமிழ் நாடு பாடநுால் கழக தலைவராக பொறுப்பேற்றார்
தமிழ் நாடு பாடநுால் கழக தலைவராக, லியோனியை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் அதன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தமிழக பள்ளி கல்வி துறையின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) அரசின் பாட புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு கட்டண அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன.
தமிழ் நாடு பாடநுால் கழக தலைவராக, லியோனியை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் அதன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அன்று மாலை வரை பதவியேற்க லியோனி வரவில்லை. லியோனி ஏன் வரவில்லை என்பததற்கான காரணமும் பாடநுால் கழகத்துக்கு அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. அவர் நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது காரணமால்க இருக்கலாம் என கூறப்பட்டது
லியீனி நியமனத்திற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. லியோனி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (O.Panneer Selvam), பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
ALSO READ | திமுக ஆட்சியில் முதல்முறையாக பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
பாமக தலைவர் ராமதாஸும் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என விமர்சித்திருந்தார்
ALSO READ | பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR