Dindigul Sreenivasan Latest Speech Tamil | தஞ்சையில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள், அவர்கள் குடும்பத்தினரின் 80 லட்சம் வாக்குகளால் தான் நாம் தோற்றோம் என பேசினார். அவரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, " கூட்டணி கட்சிகள் 100 கோடி ரூபாய் கேட்கிறார்கள் என்று தான் பேசியது உண்மைதான். கம்யூனிஸ்ட் கட்சியினர் உங்கள் ஊரில் இருக்கிறார்களா?. திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியினரே இல்லை சத்தமே கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமி எங்களை கூப்பிட்டு பேசிவிட்டா,  போகும் கூட்டங்களில் கூட்டணி குறித்து எதுவும் பேசி குழப்பிட வேண்டாம், மற்ற விஷயங்களை மட்டும் பேசுங்கள். அமைதியாக இருகங்கள், மீதியெல்லாம் நாங்கள் பேசிக்கிறோம். நல்லக்கூட்டணியை அமைத்திட அண்டர்ஸ்டான்டிங்கில், அண்டர்கிரவுண்ட் வேலை அருமையாக  நடைபெற்று கொண்டிருக்கிறது." என தெரிவித்தார்.  


மேலும் படிக்க | சொந்த வீடு கட்டுவதற்கு தமிழக அரசு 3,50,000 ரூபாய் நிதியுதவி! யார் யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்?


தொடர்ந்து பேசிய அவர், கட்சியினரின் ஒருவருக்கு ஒருவர் பிரச்னையையே தீர்க்க முடியவில்லை. போன தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். ஒரு தபால் ஓட்டு கூட எனக்கு விழவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் எல்லாம் கொலைகார பாவிகள். சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றிபெற்றதே போதும்டா சாமிகளா என்று  ஓடி வந்துட்டேன்" என்றார். 


பின்னர், பத்திரிக்கையாளர்களை பார்த்து அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன், எங்களை மாட்டிவிடாதீர்கள் என்று சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டார். அதிமுக மூத்த தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். உட்கட்சி பிரச்சனைகள், நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனிக்கும் அவர்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக மூத்த தலைவர் தங்கமணி பேசும்போது, உட்கட்சியில் ஒற்றுமை இல்லை, இப்படியே இருந்தால் எதிர்க்கட்சி வரிசையில் தான் 2026 ஆம் ஆண்டும் இருப்போம் எனவும் தெரிவித்தார். அவரின் இந்தப் பேச்சு எடப்பாடி பழனிசாமிக்கும் அறிவுறுத்தல் கொடுக்கும் வகையில் இருப்பதாக அரசியல் தளத்தில் பேச்சு எழுந்தது.


மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் இவர்களுக்கு மட்டும் சிறப்புரிமை - அரசு முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ