திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள் கள்ளச் சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட அனுமதி இல்லாத மதுபான பார்களுக்கு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் தலைமையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து அனுமதி இல்லாத மதுபானபார்களுக்கு சீல் வைக்க சென்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | CBSE மற்றும் ஐசிஎஸ் கல்வி முறையிலும் தமிழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு


இந்நிலையில் மூன்று கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் அவற்றில் இரண்டு கடைகளில் பூட்டே போடாமல் வெறும் துணியை மற்றும் சுற்றி கண்துடைப்பு நாடகம் நடத்திச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் சம்பவத்தால் தமிழகமே பரபரப்பாக காணப்படும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்ட விரோத மதுபானபார்களுக்கு நடவடிக்கை என்ற பெயரில் நாடகம் நடத்திச் சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


சிறிது நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட திருத்தணி பள்ளிப்பட்டு ஆர்கே பேட்டை பொதட்டூர்பேட்டை கனகம்மாசத்திரம் திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 22 அரசு டாஸ்மார்க் கடை செயல்பட்டு வந்தது. இதில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பார்கள் இயங்கி வந்த நிலையில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசு அனுமதி பெறாமல் ஐந்திற்கும் மேற்பட்ட பார்களுக்கு சீல் வைத்து டாஸ்மாக் ஊழியர்களிடம் பேசிய டிஎஸ்பி விக்னேஷ் அரசு விதித்த விதிகளின்படி ஏழு மது பாட்டலிற்கு மேல் வழங்க வேண்டாம் அப்படி வழங்கினால் தங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


மேலும் தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட தடயவியல் துறை நிபுணர்கள் சென்றனர். அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டன. அது ஒரு பின்னர் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தயடவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். மேலும் சயனைடு உள்ளதா ? எனவும் சோதனை செய்தனர். தொடர்ந்து தடயங்கள் சேகரித்து சென்றனர்.


மேலும் படிக்க | வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ