மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி பூஜை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி, மக்கள்  விநாயகர் சதுர்த்தி பூஜை நேரலையை, காலை 10.45 மணி முதல் 11.15 மணி வரை www.maduraimeenakshi.org, www.tnhrce.gov.in மற்றும் மதுரை மீனாட்சி யூட்யூப் சேனலிலும் பூஜையை கண்டு பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்யலாம்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி பிள்ளையார் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பிள்ளையாருக்கு சதுர்த்தி அன்று, 18 படியில் மிக பிரம்மாண்ட அளவில் கொழுக்கட்டை செய்யப்படும்.. 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டை செய்யப்படும். இந்த முக்குறுணி பிள்ளையார் சிலை சுமார் 8 அடி உயரம் கொண்டது.


அந்த பிரம்மாண்டமான கொழுக்கட்டை தான் அன்று விநாயகருக்கு படைக்கும் முக்கிய நைவேத்தியம்.


அந்த பிரம்மாண்டமான கொழுக்கட்டையை நான்கு பேர் சேர்ந்து,  எடுத்து வருவார்கள்.


கொரோனா காரணமாக கட்டுபாடுகள் உள்ள நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


அதனால்  பக்தர்கள், விநாயகரை வழிபட, பூஜை நேரலையாக ஒளிபரப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


ALSO READ | ஆட்டோவில் நடந்த பிரசவம், ஆண்டவனாய் மாறிய ஆட்டோ ஓட்டுனர்: தாயும் சேயும் நலம்!!


இதனால், மதுரை மக்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள விநாயக பக்தர்கள் இந்த நேரலையில் விநாயகரை கண்டு தரிசிக்கலாம்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த பிரம்மாண்டமான முக்குறுணி பிள்ளையாரை கண்டு தரிச்சிக்காமல் போக மாட்டார்கள்.


ALSO READ | கொரோனா நிலவரம்: தமிழகத்தில் இன்று 5,995 பேருக்கு பாதிப்பு; 101 பேர் மரணம்