வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி - தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்
District Election Officer Radhakrishnan explained : வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 2024 ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஜூன் 5 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதனையொட்டி வாக்குப் பெட்டிகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்குள் யாரும் செல்லாமல் இருப்பதை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ராணி மேரி கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் இராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், வட சென்னை தேர்தல் பொறுப்பாளர் ரவி தேஜா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் இராதாகிருஷ்ணன், " வாக்கு எண்ணும் மையங்களை இன்று ஆணையருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலராக கூட்டாக ஆய்வு செய்தோம். யாராக இருந்தாலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்திற்குள் செல்ல முடியாது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 மேசைகள் அமைத்து வாக்கு எண்ணவும், 16 கேமராக்கள் பாதுகாப்பிற்காக வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளும் அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் முறையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்தோம். வடசென்னை தொகுதி வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்துள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிக்க 104 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமிராக்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய தடையில்லா மின்சாரண விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.
அதன்பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஒரு பணி நேரத்தில் 140 அதிகாரிகள் காவல் இருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் சரியாக இருக்கிறதா என்பதனை தினமும் எங்களுக்கு ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு கொடுப்போம்." என்று கூறினார்.
மேலும் படிக்க - 'எனது மொபைலும் ஒட்டு கேட்கப்படுகிறது...' குண்டை தூக்கிப்போட்ட ஹெச். ராஜா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ