தீபங்களின் திருநாளான தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் மக்கள் அனைவரும் பண்டிகையின் அம்சங்கள் எந்த வகையிலும் குறைந்து விடாமல் முழு உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தீபாவளியை (Diwali) மக்கள் முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து மக்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதோடு உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.


பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வாய்மையும் அறமும் தான் இறுதியில் வெல்லும். இதையே தீபாவளி திருநாள் எடுத்துரைக்கிறது. ஒட்டுமொத்த நாட்டிற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை இந்த நன்னாள் வாரி வழங்கட்டும் என்று கூறியுள்ளார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (K Palanisamy) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது. இந்த தீபாவளி திருநாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து


தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீப ஒளித் திருநாள் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் துன்பங்களை நீக்கட்டும். இன்பங்களும், இனிய நிகழ்வுகளும் களை கட்டட்டும். தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


இவர்களைத் தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


ALSO READ: தீபாவளித் திருநாள் ராசிபலன்: பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR