நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் விஜயகாந்த் பரப்புரை!!
நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!
நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!
மக்களவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது உடன்பாட்டில் கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என்று நிருபர்களிடம் சைகை மூலம் கூறிய சம்பவம் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் பூரண நலமடைந்து தனக்கே உரித்தான அந்த கம்பீர பாணியில் பொதுக்கூட்டங்களில் மீண்டும் பேச வேண்டும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘நமது தலைவர் கேப்டன் நாளையும் நாளை மறுநாளும் நமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் சில பகுதிகளில் பிரசாரம் செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.