வரும் மக்களவை தேர்தலையொட்டி திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் மதிமுக மற்றும் திமுக இடையே தொடர்ந்து மூன்றாவது கட்டமாக இன்றும் பேச்சுவாரத்தை நடைபெற்றது. ஏற்கனவே மதிமுகவுக்கு இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சென்னை அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ள வைகோ மற்றும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டு மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டு கையெழுத்தானது. அதில் ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் மதிமுக 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக ஆதரவு என அளிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.


ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகம், புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 10, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2, மனித நேய மக்கள் கட்சி 1, கொங்கு நாடு மக்கள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, இந்திய ஜனநாயகக் கட்சி 1 என்ற கணக்கில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.