ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்காமல் தமிழகம் காலம் தாழ்த்தி வரும தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் மதிமுக பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்... முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யயப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்யும் வழக்கில் ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தும், 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும் ஆளுநர் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. 


ஆனால் அதே நேரத்தில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கையினை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகமும் இணைந்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். இந்த அரப்போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடத்தப்படவுள்ள போராட்டமானது வரும் டிசம்பர் 3-ஆம் நாள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.