திமுக மாவட்டச் செயலாளர்கள், MLA மற்றும் MP-க்கள் கூட்டம் அறிவிப்பு!
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக மாவட்டச் செயலாளர்கள், MLA மற்றும் MP-க்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக மாவட்டச் செயலாளர்கள், MLA மற்றும் MP-க்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!
இதுதொடர்பாக இன்று திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிகையில் குறிப்பிட்டுள்ளதாவது.... திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பிர்கள் கூட்டம் வரும் மார்ச் 11, 2019 அன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு பிப்ரவரி 25-ஆம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்படும் எனவும், வருப்ப மனுக்களை இன்று வரை வழங்கலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கால அவகாசம் நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். மேலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து இருப்பவர்களிடம் வரும் 9-ஆம் தேதி திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் நேர்காணல் நடத்த இருப்பதாகவும் அன்பழகன் தெரிவித்து இருந்தார்.
இதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 10-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.