முரசொலி பவள விழா கண்காட்சியில் கருணாநிதி!!
திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு முரசொலி பவள விழா கண்காட்சியின் அரங்கை பார்வையிட்டு நெகிழ்ந்தார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டாக காலமாக கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முரசொலி மாறன் பிறந்த நாள் அன்று முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். தற்போது உடல்நலம் தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை வரவேற்று அழைத்து சென்றனர்.
மெழுகு சிலை முரசொலியின் பழைய கால கட்டிடங்கள், அந்தக் காலத்து அச்சு இயந்திரங்கள், சட்டசபையில் முரசொலி செல்வத்தை கூண்டில் ஏற்றிய காட்சிகள், பழைய முரசொலி முக்கிய செய்திகளின் தொகுப்புகளை கருணாநிதி பார்வையிட்டார். மேலும் தாம் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு சிலை உள்ள அறைக்குச் சென்றும் கருணாநிதி பார்வையிட்டார்.
சுமார் 40 நிமிடங்கள் முரசொலி அலுவலக வளாகத்தைப் பார்வையிட்ட பின்னர் கருணாநிதி புறப்பட்டுச் சென்றார். பொதுநிகழ்வில் பங்கேற்கும் கருணாநிதி ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலம் தேறிய நிலையில் கருணாநிதி பொதுநிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் வெளியே வந்திருக்கிறார்.