சமீபத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் ஒன்றை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, தற்போது விவாத பொருளாய் உருமாறியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபகாலமாக பழந்தமிழ் அறிஞர்கள், புலவர்களுக்கு காவி சாயம் பூசுவது வழக்கமாகிவிட்டது. பாடநூலில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டது துவங்கி பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கு மக்களிடையே கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


திருவள்ளுவர் பல குறள்களை இயற்றியிருந்தாலும் அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு அதன்மூலம் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்துள்ளது. அந்த பதிவில் உள்ள படத்தில் திருவள்ளுவர் காவி உடையணிந்து, நெற்றியில் திருநீறு பூசி, ருத்திராட்ஷ மாலை அணிந்து உள்ளார்.



இந்த பதிவுக்கு தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்றபோதிலும் காவி காவலர்கள் தங்கள் பங்கிற்கு தங்கள் பதிவை நியாயப்படுத்தும் விதமாக பல புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 



இந்நிலையில் பாஜக-வின் இந்த செயலை விமர்சிக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தினை கையில் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., 


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!



எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.