சென்னை: நாளை உலகம் முழுவதும் இரமலான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் கொண்டாட உள்ளனர். இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துச்செய்தி கூறிவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இஸ்லாமிய மக்களுக்கு இரமலான் வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார். அதில், அனைத்து வகையிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த இரமாலன் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.