தெலுங்கு தேசம் கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்ளும் MK ஸ்டாலின்!
தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்கள் வர இருப்பதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருப்பதால் அங்கு தெலுங்கு தேசம் கட்சிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோப்போல் விஜயவாடாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பிரசாரம் செய்கிறார் எனவும், வரும் 31-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் அரவிந்த் ஜெக்ரிவால் பிரசாரம் செய்ய உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகள் கொண்ட ஆந்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் நாள் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவை பொருத்தமட்டில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கு தேச கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சமித்தி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.