சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில் ராஜ் பவனில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக இன்று தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியதோடு, பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆளுநரிடம் பேசியதாகத் தெரிகிறது. 


133 வெற்றி வேட்பாளர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரினார் மு.க.ஸ்டாலின் (MK Stalin). 


முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். இன்று மாலைக்குள் பதவியேற்பு குறித்த தகவல்களை தெரிவிப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இதற்கிடையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து  தலைமைச் செயலக அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டனர். கொரோனா தொற்று (Coronavirus) காரணமாக மிகச் சிலருக்கே இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கபப்டும் என தெரிகிறது. இந்த விழாவில் 300-க்கும் குறைவானவர்களே கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு


யாருக்கு எந்த துறை, அதிகாரிகள் நியமனம் எப்படி


திமுக அமைக்கவிருக்கும் புதிய சட்டசபையில் யார் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்பது குறித்தும் பல ஊகங்கள் கிளம்பியுள்ளன. இன்னும் இது குறித்த உறுதியான தகவல்கள் வரவில்லை என்றாலும், திமுக மூத்த தலைவர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அளிக்கப்படக்கூடும் என தெரிகிறது. அதேபோல் மா. சுப்பிரமணியம் சுகாதாரத் துறையைப் பெறலாம் என கூறப்படுகின்றது.


அதிகாரிகளின் நியமனத்தைப் பொறுத்தவரை, டாக்டர் வி. இறையன்பு தலைமைச் செயலாளராக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம் ஆகியோரது பெயர்களும் முதல்வரின் தனிச்செயலாளர் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 


2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் (Tamil Nadu Assembly Elections 2021) மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 133 இடங்களிலும், அதிமுக 66 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 14 இடங்களையும், பாரதீய ஜனதா கட்சி 4, பாட்டாளி மக்கல் கட்சி 5, விடுதலை சிறுதைகள் கட்சி 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் வென்றது.


தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டமூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இரண்டாவது நாளாக நேற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். 


ALSO READ: சறுக்கும் பாமக, தேமுதிக! நாதக முன்னேற்றம்! அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR