சென்னையில் காலமான முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி.மு.க-வில் உறுப்பினர் முதல் துணைப்பொதுச்செயலாளர் வரை பதவி வகித்தவர் பரிதி இளம்வழுதி. 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில், 1996-2001 காலகட்டத்தில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். அதன் பின்னர் 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பரிதி இளம்வழுதி பணியாற்றினார்.


மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த அவர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திமுக-வில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா காலமான பிறகு ஓபிஎஸ் அணியிலும், அதன் பிறகு டிடிவி தினகரன் ஆதரவாளராகவும் இருந்தார்.


தற்போது அ.ம.மு.கவில் அமைப்புச் செயலாளராக இருந்த பரிதி இளம்வழுதி  உடல்நலக்குறைவால் ப, அடையாறு மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 58.


சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில், பரிதி இளம்வழுதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மறைந்த கலைஞரால் இந்திரஜித் என்றும், வீர அபிமன்யு என்றும் பாராட்டப்பட்டவர் பரிதிஇளம்வழுதி, ஆளுங்கட்சியைஎதிர்த்து தனியாக குரல் கொடுத்தவர் என அவர் தெரிவித்தார்.