திமுக செயல்பாடுதான் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக செயல்பாட்டால்தான் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வருகிற 7ந் தேதியுடன் தி.மு.க. அரசு பதவியேற்று ஒரு வருடம் முடியப்போகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக உடனடியாக மக்களை சந்திக்க முடியவில்லை. பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறோம். மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன்.
மக்களுக்கான திட்டங்களை அவர்களுக்கு உண்மையில் கொண்டு சேர்ப்பதே திராவிட மாடல் அரசு. வளர்ச்சி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் விருப்பமாகும்.
இன்று 10,427 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்க்கிறேன். பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதே இந்த ஆட்சியின் நோக்கமாகும்.
மேலும் படிக்க | எட்டாவது முறையாக சாம்பியன்ஷிப்பை வென்ற சென்னை வீரர்!
தமிழகத்தில் எனது தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா தலைவிரித்தாடியது. தீவிர நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாக தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 91 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. பெண்கள் கல்வியை மட்டும் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் எத்தனை வித தடைகளையும் எதிர்கொள்ள முடியும்” என்றார்.
மேலும் படிக்க | தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜான் அமலன் தேர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR