அரசு பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கும் திமுக கவுன்சிலரின் கணவர்!
மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார். இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட பாஸ்கரை கண்டித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.
அப்பொழுது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். நீங்கள்ளா யர்ரா இங்க எதுக்குடா பிரச்சன பன்றிங்க நீங்க இதையெல்லாம் கேட்க கூடாது என்று போதையில் ஒருமையில் பள்ளி குழந்தைகளின் முன்பாகவே அனைவரையும் அநாகரீகமாக பேசுகிறார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம்: நக்கீரன் நிருபர்-புகைப்படக் கலைஞர் மீது சமூக விரோதிகள் தாக்குதல்
அதற்கு தலைமை ஆசிரியர் நீங்க தப்ப தட்டிகேட்க வேண்டியதுதானே என்று கூறவும், கோபத்தின் உச்சத்தில் சென்ற கவுன்சிலர் கனவர் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெறித்து தாக்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளி நேரத்தில், பள்ளி குழந்தைளின் கன் முன்னே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. கவுன்சிலரின் கணவர் பள்ளி தலைமையாசிரியரை தாக்குவதை அருகில் இருந்தவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தங்கப்பாண்டி மரணத்திற்கு நீதி வேண்டும்: சீமான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ