தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட சிறுவர்கள்.. தின்பண்டம் அனுப்பி பாசத்தை பொழிந்த 'மதுரைக்காரர்கள்'

மதுரையில் பல்வேறு சமூகத்தினர் நடத்தும் கடைகளில் இருந்து தின்பண்டங்களை வாங்கி, அவற்றை தென்காசியில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட சிறுவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் அஞ்சல் துறை அனுப்பியுள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 19, 2022, 10:28 PM IST
  • தென்காசி மாவட்டத்தில் சிறுவர்களும் - கடைக்காரும் உரையாடும் காணொலி வைரலானது.
  • வீடியோ வைரலானதை தொடர்ந்து, 5 பேர் மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.
  • ஊர் நாட்டமை, கடை உரிமையாளர் என 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட சிறுவர்கள்.. தின்பண்டம் அனுப்பி பாசத்தை பொழிந்த 'மதுரைக்காரர்கள்' title=

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று தின்பண்டம் வாங்க சென்றுபோது நடந்த சம்பவம், காணொலியாக இணையத்தில் வெளியானது. கடையில் இருந்த நபர் அந்த வீடியோவை எடுத்து பகிர்ந்துள்ளார் என தெரிகிறது. 

சிறுவர்கள் தின்பண்டம் வாங்க சென்றபோது, அந்த கடைகாரர், 'உங்களுக்கு எல்லாம் தின்பண்டம் கொடுக்க முடியாது. ஊர்க்கூட்டம் போட்டு  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு கடையில் இருந்து எதுவும் தரக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது' என கூறுவது வீடியோவில்  பதிவாகியுள்ளது. அதற்கு ஏதும் அறியாத அந்த  சிறுவர்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கின்றனர். 

மேலும் படிக்க | சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மாட்டோம் என்று கூறிய கடைக்கு சீல்!

அதற்கு அந்த கடைக்காரர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக்கூடாது என்று எங்கள் ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள்.அதனால் உங்கள் தெருகாரர்கள் இங்கு வரக்கூடாது. அதனால் நீங்கள் யாரும் இங்கு பொருள் வாங்க முடியாது. இதை உங்கள் பெற்றோர்களிடமும் சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ வைரலாகி தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், தீண்டாமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட சிறுவர்களுக்கு, மதுரையில் உள்ள பல்வேறு சமூகத்தினர் வைத்திருக்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று தின்பண்டங்களை வாங்கி, சிம்மக்கல் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தின்பண்டங்களை அனுப்பி வைத்தனர்.

மேலும், தீண்டாமைக்கு எதிராக ஒரு குழு ஒன்றை அமைத்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கூறிய அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, 5 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டு, ஊர் நாட்டமை, கடை உரிமையாளர் என 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

மேலும் படிக்க | 'பணிச்சுமை அதிகரிப்பு.. வருமானம் குறைவு' ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News