காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை - அமைச்சர் ஐ பெரியசாமி!
காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல் என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக - அமைச்சர் ஐ. பெரியசாமி.
திண்டுக்கல் மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட ஜேசிபி இயந்திரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று 26.07.24 நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் திண்டுக்கல் மேற்குரத வீதியில் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ 30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் இருப்பதற்காக நாம் கூனி, குறுகிப் போக தேவையில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, "தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்திய கூட்டணியை உருவாக்கி 40க்கு 40 வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளோம்.
கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல் என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக. அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் உழைப்பால் உயர்ந்த தலைவர்கள். அந்த தலைவர்கள் தற்போது கல்விக்காக அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த அடிப்படையில் அதிகமான பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விக்கு மிகப்பெரிய உயர்வையும், பெருமையும் சேர்த்துள்ளனர். பழனி நகராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகியோருக்கு இடையே உள்ள பிரச்சனை குறித்த கேள்விக்கு, பழனியில் கிரிவலப் பாதை மக்களின் வசதிக்காக ஒழுங்கு படுத்தி உள்ளனர். மற்ற தெருக்களை நிர்வாகம் சுத்தமாக, சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என அறநிலையத்துறை விரும்புகிறது.
தற்போது வியாபாரிகளை, பொதுமக்களை அழைத்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதன் மூலம் பேசி தீர்வு காணலாம் என்ற முடிவை இன்று எட்டி இருக்கிறது. அதனால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. யாராக இருந்தாலும் மாநகராட்சி, , ஊராட்சி திட்டங்களில் அவர்கள் சொல்லுகின்ற பொழுது அதனை காது கொடுத்து கேட்டு அதனை நிவர்த்தி செய்யக் கூடிய அரசு நம்முடைய அரசு. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் சொத்துக்கள் குறித்த கேள்விக்கு, தனிநபர் அபகரிப்பு இருந்தால் அரசு சட்டபடியின் நடவடிக்கை எடுக்கும். ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். எந்த குற்றச்சாட்டுகளை சொல்லுகின்ற பட்சத்தில் அதற்குரிய விளக்கம் கேட்க வேண்டும் என்பது தனிப்பட்ட அடிப்படை உரிமை அதன் மீது புகார் வரும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் ரூ.4 கோடி முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது முழுமையான விசாரணைக்கு பின்பு தவறு யார் செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கக்கூடாது - தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ