தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா?

Nirmala Sitharaman : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 -25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் முதன்முறையாக தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒருமுறைகூட இடம்பெறவில்லை.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2024, 01:52 PM IST
  • மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு
  • தமிழ், தமிழ்நாடு வார்த்தைகூட இடம்பெறவில்லை
  • பாஜக தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக விமர்சனம்
தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா? title=

Nirmala Sitharaman News Tamil Latest : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒருமுறைகூட இடம்பெறவில்லை. 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிர்மலா சீதாராமன், ஒவ்வொரு முறையும் திருக்குறள் கூறுவதும், தமிழ் செய்யுள்களை மேற்கோள் காட்டியும் படித்து வந்தார். ஆனால் இம்முறை ஒருமுறை கூட அப்படியான வார்த்தைகள் ஏதும் இடம்பெறவில்லை. இதனால் திட்டமிட்டே தமிழ் மற்றும் தமிழ்நாடு மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? இல்லை ஏமாற்றமா? நிதியமைச்சரின் அறிவிப்புகள்...

இது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ண மூர்த்தி, லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காத அதிருப்தியில் மத்திய நிதியமைச்சர் தமிழ் மற்றும் தமிழ்நாட்டை திட்டமிட்டே புறக்கணித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், " தமிழ்நாடு - தமிழ் என்கிற பெயரே இல்லாத மோடி பட்ஜெட். வரியெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து, நிதி எல்லாம் பீகார் & ஆந்திராவுக்கு. தமிழ்நாட்டின் மீது பொருளாதார போரை தொடுத்திருக்கிறது சங்கிக்கூட்டம். எட்டு முறை வந்தும் வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களை வஞ்சம் வைத்து பழிதீர்த்துள்ளார் மோடி" என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் #BJP_Betrayed_Tamilnadu என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகியுள்ளது. அதில், தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் ஏதும் ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது, நிர்மலா சீதாராமன் - மோடி ஆகியோர் கூட்டு சேர்ந்து வேண்டுமென்றே வாக்களிக்காத தமிழ் மக்களை பழிவாங்கியுள்ளனர் என்று விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு கொடுக்கும் வரியை வாங்கிக் கொண்டு, அதனை பீகார், ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு நிதியாக வாரி வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு ஏன் திட்டங்களை அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். 

திமுகவினர் மத்திய பட்ஜெட் குறித்து தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அதிகவரி கொடுக்கிறது, இருந்தபோதும் இந்த மாநில மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்?, தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருப்பதையே மத்திய அரசு மறந்துவிட்டதா? என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். அத்துடன் பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை நடத்துவது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க  | Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News