தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் கருணாநிதி ''திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விடலாம்'' என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் விட்டார்கள் என்று கூறினார். ''திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தோற்காது, தோற்கப் போவதுமில்லை''.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இப்போது நான் யாருக்கும் அறிவுரை எதுவும் கூறப்போவதில்லை. ஏனென்றால் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் பெற வேண்டிய அறிவுரைகளையெல்லாம் பெற்றிருப்பீற்கள் என கருதுகிறேன். இனி மேலாவது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று ''நம்மை நாமே'' திருத்திக் கொண்டு துரோகச் செயல்களுக்கு இடம் தராமல் தூய்மையான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தி வெற்றிகளைப் பெறுவதற்கு நாம் ஒன்றாக செயல்படவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்து நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பலமான அடியாக  யாருக்கும் பயப்படாத அடியாக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக இருக்கவேண்டும் என ஒவ்வொரு உறுப்பினரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தனது உரையை முடித்தார்.


இச்செயற்குழு கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.