Important Notice | தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!
Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்கள் சார்ந்து இரண்டு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Employees & Pensioners Updates: அரசு ஊழியர்கள் ஓய்வுதியர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது அகவலைப்படி உயர்வு, சம்பளம் உயர்வு, அகவலைப்படி நிலுவைத் தொகை குறித்து அறிவிப்புகளும், புதிய நடைமுறை, விதிமுறை, நிபந்தனைகள் சார்ந்தும் தகவல்கள் அவ்வப்போது அரசு சார்பில் வெளியிடப்படும். அந்த வரிசையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிர்கள் சார்ந்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு என்ன?
அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தைம குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல் அதிகமாக உள்ளதாகவும் அரசு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறையை கீழ்கண்டவாறு எளிமைப்படுத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.
இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் மற்றும் மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே குடும்ப ஓய்வூதியம் கோறும் தேர்வுகளில் கணவன் மற்றும் மனைவியின் இறப்பு சான்றுதல் மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது என்று அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - DA Hike | புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி
அதேபோல தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் நியமனதாரரை நியமனம் செய்வது தொடர்பான தெளிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரரின் விருப்பத்தின் பெயரில் அவருடைய ஓய்வுதத்திலிருந்து சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வுதியர் இறக்கும் நேர்வில் அவர்தம் துணைவருக்கோ அல்லது அவருடைய துணைவர் உயிரோடு இல்லாதபோது ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனதாரருக்கோ இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொகையானது வழங்கப்படும்.
மேலும் துணைவர் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது நியமனதாரர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வுதரின் வாரிசுகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும்.
ஏற்கனவே பல்வேறு ஓய்வூதியதாரர்களின் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர்களிடம் பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதிர் இறந்த பின்பு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த தொகையினை பெறுவதற்கு உரிய நியமனதாரரை ஓய்வூதிரோ அல்லது அவரது துணைவரோ இருவரும் உயிரோடு இருக்கும்போதே நியமனம் செய்து கொள்ளலாம் என்று அரசு கடிதத்தின் வாயிலாக தெளிவுரை வழங்கப்பட்டு உள்ளது
மேற்காணும் அறிவுரையின் படி உரிய வழிமுறைகள் வாயிலாக தமிழ்நாடு அரசு ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான நியமனதாரரை ஓய்வூதிரோ அல்லது அவருடைய துணைவரோ இருவரும் உயிரோடு இருக்கும்போதே நியமனம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு சிறப்பு செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - eKYC Deadline | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! உஷார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ