DA Hike | புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி

TN Govt DA Hike Pension Staff 2024: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை மறுத்தது பாரபட்சமானது. அவர்களுக்கு அகவலைப்படி உயர்வை கொடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு. அதுக்குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 21, 2024, 04:59 PM IST
DA Hike | புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி title=

DA Hike Announcement in Tamil Nadu: தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு சற்றுமுன் அகவலைப்படி உயர்வை கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எந்த வகையை சார்ந்த தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது? எப்போது இந்த அகவலைப்படி உயர்வு கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? என்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள். 

அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அவ்வப்போது அகவலைப்படி உயர்வு, சம்பளம் உயர்வு, அகவலைப்படி நிலுவைத்தொகை, மாத ஓய்வூதியம் உயர்வு, புதிய சலுகை சார்ந்த அறிவிப்புகளும் புதிய நடைமுறை மற்றும் விதிமுறை நிபந்தனைகள் சார்ந்தும் தகவல்கள் வெளியிடப்படும். 

அந்த வகையில் தமிழக அரசின் ஒரு பொதுத்துறை ஓய்வூதியர்களுக்கு அகவலைப்படை உயர்வு குறித்து நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டிருக்கிறது. இந்த தகவல் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். 

தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது 

மேலும் படிக்க - அரசு ஊழியர்களை டார்கெட் செய்யும் மோடி அரசு.. அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய செய்தி!

மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கான அகவலைப்படியை 17% இருந்து 28% ஆக உயர்த்தியது. அதேபோல ஓய்வூதியம் 28% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. 

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதர்களுக்கு அதே அளவு அகவலைப்படி உயர்வை அறிவித்தது. ஆனால் இந்த உயர்வு தமிழ்நாடு குடிநீர் வளங்கள் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. 

இதுக்குறித்து தமிழ்நாடு குடிநீர் வளங்கள் மற்றும் வடிகால் வாரியத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலசங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் ஊழியர்களுக்கு மட்டும் அகவலைப்படி உயர்வு வழங்கப்பட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு மறுத்தது என்பது பாரபட்சமானது. அதனால் ஓய்வூதியதாரர்களுக்கும் 2022 ஜனவரி மாதம் முதல் அகவலைப்படி உயர்வை கணக்கிடப்பட்டு நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

மேலும் படிக்க - தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News