சென்னை தலைமை செயலகத்தில் 16-ஆவது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை அவை குறிப்புகளை இனி நேரடியாக மக்கள் இணையதளத்தில் படிக்கும் வசதியினையும், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர்  மு.கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு ஆகியவற்றையும், பொது மக்களின் பார்வைக்கு சட்டமன்றப் பேரவையின் இணையதளத்தில் (www.assembly.tn.gov.in) பதிவேற்றம் செய்யும் நிகழ்வையும் சபாநாயகர் அப்பாவு தொடங்கிவைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பட்டாசு வெடித்து கொண்டாடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்; மவுனம் காக்கும் ஈபிஸ் தரப்பு


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, அதிமுக விவகாரம் உட்கட்சி பிரச்சனை எனவும், அவர்கள், தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி தான் நடந்துகொள்ளும் எனக் குறிப்பிட்டார். இந்த விவகாரம் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினை இல்லை எனவும், இது ஒரு கட்சி பிரச்சனை தான்,  நல்ல முடிவு வரும் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறினார். 


சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு. ஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்கள் குறித்து சட்டமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி நியாயமாக எடுப்போம் எனவும் அப்பாவு குறிப்பிட்டார். அதிமுகவில் நான்கு பிரிவுகளாக உள்ளார்கள். அதற்கு இந்த அரசு காரணம் இல்லை. இதனை அரசியல் ஆக்க விரும்பவில்லை எனவும் அப்பாவு கூறினார்.


மேலும் படிக்க | உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: அடுத்த கட்ட நடவடைக்கை என்ன?


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ