திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்
தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே, பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தயாராகவுள்ளது.
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக (DMK) அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் புதிய கட்சியின் ஆட்சியையும் புதிய முதல்வரையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே, பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தயாராகவுள்ளது.
திமுக தனித்து 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் (Congress) கட்சி 18 இடங்களையும், சிபிஐ (CPI), சிபிஐ எம் (CPI-M) தலா 2 இடங்களையும், மதிமுக, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக் கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில், பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பதவி ஏற்பு நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக, நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
முன்னதாக, காலை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், தனது தாயாரிடம் ஆசிப்பெற்றார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், பல்வேறு தேசிய தலைவர்கள், பிரமுகர்கள், என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | தமிழகம்: அமோக வெற்றி வெற்று அடுத்த முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR