சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சென்னையில் ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சியான திமுக (Dravida Munnetra Kazhagam), தனது கூட்டணி கட்சிகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு (Farm Laws) எதிராக தேசிய தலைநகரம் டெல்லியை சுற்றியுள்ள எல்லையில் விவசாயிகள் மூன்று வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 


 



திமுக தலைவரும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் (MK Stalin), கனிமொழி எம்.பி. திமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியின் பிற கட்சிகளின் தலைவர்கள், இன்று நடைபெற்று வரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.


ALSO READ |  புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயி CM பழனிசாமி தான்: MKS


திமுக தலைமையிலான உண்ணாவிரதம் போராட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். ஆனால் தடையை மீறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இன்று காலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக (Ssupport of Farmers Protesting) பச்சை நிற மாஸ்க் அணிந்து போரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 


 



ALSO READ |  LPG Gas விலை உயர்வை கண்டித்து Kanimozhi MP தலைமையில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR