நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளிலும், அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அரசூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது படித்து முடித்த வேலை கேட்ட இளைஞர்களை பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ளுங்கள் என மோடி கூறியதை சுட்டிக்காட்டும் விதமாக ஆ.ராசா பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். செண்பகப்புதூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காத மத்திய பாஜக அரசு குறை கூறும் விதமாக மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி ஆ.ராசா மாட்டு வண்டியின் மீது ஏறி அமர்ந்து பயணம் மேற்கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லேட்டாக வந்ததால் கூட்டத்திற்கு செல்ல நடிகை நமீதாவுக்கு அனுமதி மறுப்பு!


மேலும், மோடியின் வாஷிங் மெஷினுக்குள் சென்று வெளியே வந்தால் ஊழல்வாதிகள் உத்தமர்கள் ஆகிவிடுகின்றனர். உச்ச நீதிமன்ற விசாரணையில் பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் தேர்தல் நிதி வழங்கிய 35 கம்பெனிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கியவை. இந்த பணத்தை  நஷ்டத்தில் இயங்கிய கம்பெனிகள் எப்படி தேர்தல் நிதியாக வழங்கின. எந்த குற்றச்சாட்டை முன் வைத்தாலும் நாடாளுமன்றத்திற்கு வராத ஒரே பிரதமர் மோடி தான். 45 கம்பெனிகள் கிட்டத்தட்ட 2000 கோடியை பாஜகவிற்கும் மோடிக்கும் தேர்தல் பத்திரங்களாக நிதி வழங்கியுள்ளன. இதை உச்ச நீதிமன்றம் விசாரித்தால் இதில் 35 கம்பெனிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. நஷ்டத்திற்கு ஆளான கம்பெனிகள் எப்படி இவ்வளவு தேர்தல் நிதி வழங்கியது. 


கருப்பு பணத்தை வெள்ளையாக பாஜகவினர் போட்ட திட்டம் இது. ஊழலைப் பற்றி மோடி பேசுகிறார். ஊழல் செய்த எல்லாரையும் தன் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார். இதனால்தான் நமது முதலமைச்சர் சொல்கிறார். மோடி வாஷிங் மெஷின் வைத்துள்ளார். ஊழல் செய்த அரசியல்வாதிகள் மோடியின் வாஷிங் மெஷினுக்குள் சென்று வந்தால் உத்தமர்கள் ஆகிவிடுகிறார்கள். இந்தியா இருக்காது என எச்சரித்த முதல்வர்கள் ஜெயிலுக்குள் இருக்கிறார்கள். எதிராக எழுதும் பத்திரிகைகள் டிவி சேனல்கள் முடக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் அடக்கி விட்டார்.


அடங்காத ஒரே குரல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். நீ வா மகனே மேட்டுப்பாளையத்திற்கு வா நீலகிரிக்கு வா என்று சொல்லக்கூடிய ஒரே துணிச்சல் நமது முதல்வருக்கு மட்டுமே உள்ளது. அவர் கொடுக்கும் துணிச்சலில் நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்றால் அமித்ஷா சும்மா அலறுகிறார். இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் ஸ்டாலினின் குரல் ஒலிக்க வேண்டும்‌. அதற்கு நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் படிக்க | இந்த நாடு வாடகைக்கு விடப்படுகிறது - கோவையில் சீமான் பிரச்சாரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ