இந்து தர்மத்தை அழிக்கவே காங்கிரஸ், திமுக உள்ளது-பிரதமர் மோடி வேலூரில் பேச்சு!

Latest News Narendra Modi In Vellore : பிரதமர் நரேந்திர மோடி, திமுக கட்சிக்கு ஊழலுக்கு முன் உதாரணமாக இருப்பதாக வேலூரில் பேசியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 10, 2024, 02:36 PM IST
  • வேலூரில் பிரதமர் மோடி உரை
  • திமுக ஊழல் அரசு என பேச்சு
  • காங்கிரஸ், திமுக இந்து தர்மத்தை அழிக்கும் கட்சிகள் - மோடி
இந்து தர்மத்தை அழிக்கவே காங்கிரஸ், திமுக உள்ளது-பிரதமர் மோடி வேலூரில் பேச்சு! title=

Latest News Narendra Modi In Vellore : “மணல் கொள்ளையில் மட்டும் 4000 கோடியை இழப்பு ஏற்படுத்தி உள்ளது திமுக அரசு. ஊழலுக்கு முன் உதாரணமாக உள்ளது திமுக, ஒட்டுமொத்த குடும்பமே ஊழல் செய்வதுதான்” என பிரதமர் மாேடி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். 

அவரது முழு உரை:

“இந்து தர்மத்தை அழிக்கவே காங்கிரஸ், திமுக உள்ளது ஜெயலலிதா போன்ற பெண்களை அவமதிக்கும் கூட்டணியாக திமுகவும் காங்கிரஸ் உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் தன்னை அர்ப்பணித்து பாடுபடுவேன்” என்று கூறினார்.

வேலூரில் பிரதமர் மோடி..

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

மேலும் படிக்க | பாஜகவை தயவுசெய்து தமிழ்நாட்டிற்குள் விடாதீர்கள்... கோவை மக்களிடம் கும்பிட்டு கேட்ட சீமான்!

பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களான வேலூர் மக்களவை தொகுதியில், புதிய நீதி கட்சியின் சார்பில் போட்டியிடும் A.C.சண்முகம், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடம் நரசிம்மன், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ் குமார், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து பேசினார்.

அப்பொழுது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தமிழில் வணக்கம் என்று கூறி தன் உரையை துவக்கினார். வருகின்ற தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்தார். மூன்றாவது முறையாக நான் பிரதமராக பதவி ஏற்கும் பொழுது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டுக்காகவும் தன்னை அர்ப்பணித்து பாடுபடுவேன் என்று கூறினார். 

மேலும் படிக்க | மகரிஷி வித்யா மந்தீர் மேல்நிலைப் பள்ளியில் இப்தார் நோன்பு திறப்பு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News