நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினா் தீ குளிக்க முயற்சி: நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு
கூட்டம் ஆரம்பித்தவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்து விட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதனையடுத்து திமுக உறுப்பினா்கள்வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினா் தீ குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி தலைமைதாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் (பொ)ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் இராமச்சந்திரன், பொறியாளா் பிரிவு மேற்பார்வையாளா் காந்தி, கணக்கர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் ஆரம்பித்தவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்து விட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதனையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரைபாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள்மணிகண்டன், சந்திரா, சரவணகார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா ஆகியோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்து விட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் 11வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கிதுரைபாண்டியன் எனது வார்டில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என கூறி நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்ற தலைவரின் போக்கை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க | மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்: செந்தில் பாலாஜி
இதனையடுத்து நகர்மன்ற தலைவா் ஜீப்பில் ஏறிசெல்ல முயன்றார். மீண்டும் ஜீப்பின் முன் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னா் நகர்மன்ற தலைவா் ஜீப்பிலிருந்து இறங்கி வெளியே சென்று விட்டார். இதனையடுத்து இசக்கிதுரைபாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
இதனை கண்ட காவலர்கள் தீக்குளிப்பை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி சமரச பேச்சுவார்த்தை நடத்தினா். அதன்பின்னா் நகராட்சி ஆணையாளா் (பொ)ஜெயப்பிரியா இசக்கிதுரை பாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினா்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணையாளா் தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் இசக்கிதுரைபாண்டியன் வார்டு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதனால் சுமார் 1மணிநேரம் நகராட்சி அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் படிக்க | கனவு உலகில் மணல் கோட்டை - முதலமைச்சரை சாடிய எடப்பாடி பழனிசாமி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ