நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்

Tamil Nadu Political News: தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. சட்ட ஒழுங்கு சிரழிந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 30, 2022, 03:21 PM IST
  • கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை அதிமுக சீரழித்து விட்டது - முதல்வர் ஸ்டாலின்.
  • திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது -ஈபிஸ்
  • நேருக்கு நேர் விவாதிக்க தயாரா இதற்கு மக்கள் தீர்ப்பளிக்கட்டும் -பழனிச்சாமி சவால்.
நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்  title=

Tamil Nadu Political News: எடப்பாடி பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது "தமிழக முதலமைச்சர் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக தமிழகத்தை சீரழித்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். அது உண்மை இல்லை. அதற்காக சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய அவர், அதன்படி அகல பாதாளத்தில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற பாதைக்கு தமிழகத்தை கொண்டு சென்றதாகவும், சட்ட ஒழுங்கு முறையாக செயல்படுத்தப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் தற்போது தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், 36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடக்க வண்ணம் சட்ட ஒழுங்கு முற்றிலும் இல்லாத தமிழகமாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது 2,138 பேர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதை பொருள் விற்பதாக கண்டறிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பது ஏன் என்றும் மற்றவர்கள் கைது செய்யப்படாததற்கு ஆளுங்கட்சியின் பின்னணி உள்ளவர்கள். அவர்களின் அழுத்தம் காரணமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: "எல்லாம் மெண்ட்டலாகத்தான் இருங்காங்க" ஆர்எஸ் பாரதியின் சர்ச்சைப் பேச்சு - பாஜகவின் பதிலடி

சமீபத்தில் ராமநாதபுரத்தில் 360 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டறிக்கப்பட்டது என்றும், இந்த விஷயத்தில் திமுக நிர்வாகி பின்னணியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக தெரிவித்தார்.

Edappadi Palaniswami

தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து மற்றவர்கள் வயிறு எரிவதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "மற்றவர்கள் வயிறு எரியவில்லை. மக்கள் வயிறுதான் தான் எரிந்து கொண்டிருக்கிறது." அந்த அளவில் தமிழகம் மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். எதற்கும் உதவாத பொம்மை முதல்வராக செயலற்ற  முதல்வராக ஸ்டாலின் விளங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சியை பழிவாங்குவதை கைவிட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கும் கருத்துக்களை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். 

மேலும் படிக்க: தனியார் பள்ளியில் ஓடிய ஆபாச வீடியோ! புகார் அளித்த மாணவியை மிரட்டிய தலைமை ஆசிரியர்

கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மிக நல்ல திட்டங்களான மடிக்கணினி வழங்க திட்டம், தாலிக்கு வழங்கும் திட்டத்தை திமுக தலைமையின் அரசு முடக்கியது. மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை முடக்கியதுதான் தமிழக அரசின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினார். 

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாடுகள் மக்களுக்காக செய்து கொடுத்திருப்பதாகவும் அதை தான் பட்டியலிட்டு பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார். அதேசமயம் கடந்த 19 மாத கால ஆட்சியில் நீங்கள் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன.. அதனால் மக்கள் அடைத்த பயன் என்ன.. என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா இதற்கு மக்கள் தீர்ப்பளிக்கட்டும் என்றும் அழைப்பு விடுத்தார். 

மேலும் படிக்க: பிரதமர் மோடி பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை -தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News