தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக-வை சேர்ந்த சில பிரமுகர்கள் விவசாயிகளை மிரட்டுவது, நிலத்தை அபகரிப்பது, கொலை மிரட்டல் விடுப்பது எனத் தொடர் கதையாகி வருகிறது. நாள்தோறும் திமுக பிரமுகர்கள் குறித்து ஏதாவது புகார் வந்துக்கொண்டே இருக்கிறது. திமுக மேலிடம் எச்சரித்தாலும், சிலர் ஆளும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது 10 கோடி மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பதாகவும், அதைத் தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்து வீசியதாகவும் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் காந்தி. இவரது சகோதரர் சுப்பிரமணி. இவர்களுக்கு  சொந்தமாக ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலம் உள்ளது. அந்நிலத்தை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்து விட்டதாக காந்தி மற்றும் சுப்பிரமணி குடும்பத்தினர் வேலூர் மாவட்ட  எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


மேலும் படிக்க: தரமணி சாலை விபத்து : 114 கி.மீ., வேகத்தில் பாய்ந்த பைக்; குறுக்கே வந்த லோடு வேன் - 2 மாணவர்கள் பலி!


அந்த புகார் மனுவில்," ஊனை வாணியம்பாடி மதுரா, ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் திமுக அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதை காந்தி மற்றும் சுப்பிரமணியின் மகன்கள், மகள்கள் தட்டி கேட்டுள்ளனர்.



மேலும் படிக்க: 40க்கு 40 என்று வெற்றி பெற வேண்டும் - மா.செ கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு


அப்போது கவிதா என்ற பெண்ணின் தாலியை அறுத்து வீசியுள்ளார். மேலும் அங்கிருந்த ஆட்களை வைத்து தாக்கி நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடியாட்களை வைத்து குடும்பத்தையே கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். 


எங்களது நிலத்தின் பட்டா மற்றும் வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புகார் மனு உடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி அலுவலக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர். 


இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தயவு செய்து என் தாலியை கொடுங்கள் எனக் கேட்பது தெரிகிறது. இருத்தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



மேலும் படிக்க: சனிக்கிழமை ஸ்கூல் உண்டு - பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ