சனிக்கிழமை ஸ்கூல் உண்டு - பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு

மழைக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 1, 2022, 05:36 PM IST
  • மழையால் கடந்த மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
  • அதனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமை பள்ளி செயல்படுகிறது
  • இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சனிக்கிழமை ஸ்கூல் உண்டு - பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு title=

தமிழ்நாட்டில் கடந்த மாதம் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பல ஏரிகளும், குளங்களும் நிரம்பியுள்ளன. மேலும் தீவிரமாக மழை பெய்ததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு கடினமான சூழல் ஏற்பட்டது. எனவே அவர்களுக்கு வசதியாக மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அங்கு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாக ஏதேனும் சனிக்கிழமை வேலை நாளாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வரும் சனிக்கிழமை 03.12.2022 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், தொடர் பெருமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள் கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம்: வருமானவரித்துறை விளக்கம்

மேலும் படிக்க | வனத்துறைக்கு போக்கு காட்டும் பெண்ணை கொன்ற காட்டு யானை; பீதியில் மக்கள்

மேலும் படிக்க | சூறாவளிக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News