காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குன்றத்தூர் அடுத்த பெரிய பனிசேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தற்போது நடந்த பொதுக் கூட்டத்தின் இடம் சிறியது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். ஆனால் இடம் சிறியது அவரது மனம் பெரியது, எந்த குறையும் அவரிடம் நான் கண்டது இல்லை. கருணாநிதி பேச முடியாத நிலையிலும் கடைசி வரை அண்ணா என பேசினார். வார்த்தை என எழுத சொன்னால் அண்ணா என்ற வார்த்தைதான் எழுதினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சிற்பி தான் சிலையை செதுக்குவார் ஆனால் தமிழ்நாட்டை செதுக்கிய கலைஞர் எனும் சிற்பிக்கு சிலை வைக்கிறோம்.  அதிமுக, திமுகவிற்கு உள்ள வித்தியாசம் காணலாம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கோடி கணக்கில் செலவு செய்தனர், ஆனால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி செய்வது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி உள்ளனர், அதை வைத்து மிரட்டி வருகின்றனர். அதிமுக, பாஜக கூட்டு களவாணிகள். பாஜக ஆட்சியில் அதானி குடும்பம் வாழ்ந்து வருகிறது, அவர் மோடியின் நெருங்கிய நண்பர். மோடி விமானி இல்லாமல் போவார் ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார்.


எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை இந்தி திணிப்புக்கு தான் எதிர்ப்பு.  பாஜக அலுவலகம் தி.நகரில் உள்ளது இந்தி பிரச்சார சபா அங்கு உள்ளது அங்கு சென்று இந்தி கற்று கொள்ள வேண்டியது தானே? முதுகெலும்பு என்றால் என்ன என்பது தெரியாது என்பதை அதிமுக மீண்டும் உறுதி செய்துள்ளது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும், தமிழக அரசின் கடன் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரி தான் அவர் கூறியதில் தவறே இல்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.  கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு உற்பத்தி திறனை வைத்து தான் கடனை மதிப்பிட வேண்டும். கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் தான் நாம் இருந்தோம். 2014 முதல் 2021 வரையிலான ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால், நாமும் கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் தான் இருந்திருப்போம்.  நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல் சரி. கடன் அளவு மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப தான் இருக்கும். நிர்மலா சீதாராமன் சொன்ன நம்பரில் தவறில்லை. மகாராஷ்டிரா மட்டும் தான் தமிழகத்தை விட உற்பத்தி அதிகம் உள்ள மாநிலம். அவர்களுக்கு கடன் குறைவாக இருக்கிறது என்றால் அவர்கள் நிதியை சிறப்பாக கையாள்கிறார்கள்.  தமிழகத்தில் யார் ஆட்சியாலோ பொருளாதாரத்தில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு 27 சதவீத கடன் இப்போது நமக்கு இருக்கிறது. 


4 மாதமாக அமைச்சர் பி.டி.ஆர். பேசாமல் இருக்கிறார் என அண்ணாமலை விமர்சித்த கருத்து குறித்த கேள்விக்கு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவது சரியல்ல. எந்த துறையில் இருக்கிறேனோ, அதற்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ, அதை அறிந்து பேசுவது தான் விதிமுறை, நாகரீகம் எனவும்,  நான் 2021ல் அமைச்சரான போது எனக்கு பல்வேறு பொறுப்புகள் இருந்தன. அந்த அடிப்படையிலும் அவ்வப்போது பேசினேன். நிதித்துறை, ஓய்வூதியத்துறை, வளர்ச்சி திட்டமிடுதல் துறை, மனித வள மேலாண்மை துறை என இத்தனை துறைகளுக்கு அமைச்சராக இருந்ததால் தத்துவ ரீதியிலும், மேலாண்மை ரீதியிலும் பங்கு வகித்ததால் அடிக்கடி பேசினேன் என்றும் தத்துவத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் கொள்கையையும், திறனையும் செயல்பாட்டையும் விளக்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது , அமைச்சர் இலாகா மாற்றிய பிறகு இன்று ஐடி பத்தியோ டிஜிட்டல் சேவை பற்றியோ தான் நான் பேசுவேன். நிதி துறை உள்ளிட்ட துறைகள் குறித்து அந்தந்த துறை அமைச்சர்கள் பேசுவது தான் மரபு, நாகரீகம் என்றார்.


மேலும் படிக்க | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: சரசரவென சரிந்தது தக்காளியின் விலை! ஒரு கிலோ இவ்வளவு கம்மியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ