ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த திமுக MLA வசந்தம் K கார்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது திமுக MLA என அறியப்படுகிறார். மேலும் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்காவது சட்டமன்ற உறுப்பினராகவும் பார்க்கப்படுகிறார்.


தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்..!


முன்னதாக கடந்த ஜூன் 13 அன்று, 43 வயதான சட்டமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து MLA-வின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரும் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் கார்த்திகேயனும் அவரது தாயும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது கார்த்திகேயன், அவரது தாய், மனைவி மற்றும் மகள் நான்கு பேரும் சிகிச்சைக்காக நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோவை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்(MK Stalin) ‘முழு அடைப்பு காலத்தில் MLA அயராது உழைத்தார் மற்றும் பலருக்கு உதவினார்.’ என குறிப்பிட்டுள்ளார்.



மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினரிடன் தான் பேசியதாகவும், அவர் தன்னுடன் நம்பிக்கையுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விரைவில் அவர் குணமடைந்து மீண்டும் பொதுமக்களுக்காக பணியாற்றுவார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


கல்வான் பிரச்சினையில் பிரதமரின் நடவடிக்கைக்கு திமுக துணை நிற்கும் -MKS...


சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுக MLA-வான J அன்பழகன்(Anbalagan), இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு வயது 62. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜூன் 10 அன்று காலமானார். இவரை அடுத்து இரண்டாவது திமுக MLA-வாக கார்த்திகேயன் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.


ஆளும் அதிமுக தரப்பில் கடந்த ஜூன் 13 அன்று, ஸ்ரீபெரும்புதூர் MLA கே பழனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.