திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் புதுக்கோட்டை அப்துல்லா. தமிழகத்தில் காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவித்தது. இந்தப் பதவிக்கு திமுக சார்பில் புதுக்கோட்டை அப்துல்லா நிறுத்தப்பட்டு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், டிவிட்டரில் செந்தழல் ரவி என்பவரின் பதிவுக்கு அளித்த பதில் தான் வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஜனவரியில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!


செந்தழல் ரவி என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூகுள் மார்க்கெட்டிங் வெளியிட்டுள்ள 40 மணி நேர டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி குறித்த அறிவிப்பை பதிவு செய்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு என ஒருங்கே அமைந்த அந்த படிப்புகளை படித்து முடிக்கும் இருவரை தானே வேலைக்கு எடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறி, கூகுளின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்யின் லிங்கையும் பதிவிட்டுள்ளார்.



இந்தப் பதிவுக்கு பதில் அளித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா, " நான் இதை முடிச்சுட்டேன், என்னை வேலைக்கு எடுக்குறீங்களாண்ணே? என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதில் டிவிட்டர் நெட்டிசன்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. புதுக்கோட்டை அப்துல்லாவின் பதிவுக்கு கீழ் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘வேலை தேடும் எம்.பி?’ என டைட்டில் வைத்து, நான்கு யூடியூப் வீடியோகளை ரெடி பண்ணிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.


ALSO READ | நீதிபதி வீட்டிற்கு சென்ற கொள்ளையன் - காத்திருந்த அதிர்ச்சி..!



1993 ஆம் ஆண்டு திமுக நகர் மாணவர் அணி துணை அமைப்பாளராக சேர்ந்த அவர், படிப்படியாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்து, இப்போது திமுகவின் மாநிலங்களை உறுப்பினராகவும் உள்ளார்.