பொதுவாக டாஸ்மாக்குகள் வருடத்தில் குறிப்பிட்ட சில நாளில் அடைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி, 18-ம் தேதி மற்றும் 26-ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ALSO READ | நீதிபதி வீட்டிற்கு சென்ற கொள்ளையன் - காத்திருந்த அதிர்ச்சி..!
இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த ஆண்டு ஜனவரி-15ல் திருவள்ளுவர் தினமும், ஜனவரி-18ல் வடலூர் ராமலிங்கர் நினைவுநாளும், ஜனவரி-26ல் குடியரசுதினமும் கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினங்களில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்" என்று அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள இந்த தினங்களில் அறிவிப்பை மீறி டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் அவற்றிற்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வரும் 9-ம் தேதியும் டாஸ்மாக் மூடப்பட்டு, இந்த மாதத்தில் மொத்தமாக 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
ALSO READ | குட்டையில் கொட்டப்பட்ட 50 மூட்டை ரேஷன் அரிசி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR