விஜய்க்கு வாழ்த்தை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது - தயாநிதி மாறன்!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்ல முடியும், வாழ்த்துக்கள் தான் சொல்ல முடியும் என கருத்து தெரிவித்தார் தயாநிதி மாறன்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்ல முடியும், வாழ்த்துக்கள் தான் சொல்ல முடியும் என காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள ஓர் தனியார் ஓட்டலில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் எம்பி கலந்து கொண்டு, வருங்காலங்களில் விளையாட்டு மேம்பாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கடந்த 18மாதங்களில் 180க்கும் மேற்பட்ட போட்டிகளை நடத்தி விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தியுள்ளதாகவும், வருங்காலங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் விரும்பும் விளையாட்டு போட்டிகளை அதிகளவில் நடத்தி அவர்களை மகிழ்விக்கவுள்ளதாகவும், இதன் மூலம் மக்கள் அதிகளவில் திமுகவிற்கு ஆதரவு தர அதிக வாய்ப்புள்ளதால் அனைவரும் சிறப்பாக ஒருங்கிணைந்து இதனை செயல்படுத்திட வேண்டும் என இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்வதாக தயாநிதி மாறன் எம்பி சிறப்புரையாற்றி பேசினார்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்ட நோக்கத்தில் தற்போது வரையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, அதிக போட்டிகளையும், அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவோம் என தெரிவித்தார். இதனையடுத்து நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது மற்றும் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதலளிக்கையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்ல முடியும், வாழ்த்துக்கள் தான் சொல்ல முடியும் என கருத்து தெரிவித்தார்.
மேலும் ஆன்மீக சொற்பொழிவுவாளர் மகா விஷ்ணு செயல் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அறிவியல் பூர்வமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் மூட நம்பிக்கைகளை வளர்த்து கொண்டு செயல்பட வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | வீட்டுக்கு வந்த விநாயகரை வழியனுப்புவது ஏன்? விநாயகரை விசர்ஜனம் செய்வது நல்லதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ