)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனால் இன்று முதல் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பிற்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதமான கொள்கை கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சியின் சட்டப்பூர்வமான பதிவுக்காகவுமே நாம் காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதனை சட்டப்பூர்வமாக பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக. இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம், வாகை சூடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் காவல்துறை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது உள்ளிட்ட 33 நிபந்தனைகளை விதித்து இந்த மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருப்பதாகவும், அதனடிப்படையில் மாநாட்டு தேதியை விஜய் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 23 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ