முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான நட்சத்திர விடுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொழில் தொடர்பான அலுவலகங்களில் என 90 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிக்கரணை பாலாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி லட்சுமி நாராயண மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தாம்பரம் அடுத்த சாலையூர் பாரத் தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம், பாலாஜி பிசியோதெரபி கல்லூரி,பாலாஜி நர்சிங் கல்லூரி, தாகூர் இன்ஜினியரிங் மற்றும் கலை கல்லூரி, ஜெருசேலம் கல்லூரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை எம்பி ஜெகத்ரட்சகன் நடத்தி வருகிறார்.  இந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.


மேலும் படிக்க | திருச்சி: காக்கிச் சட்டை காமுகர்களால் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 4 போலீசார் அதிரடி கைது


மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம் பக்கத்தில் இயங்கி வரும் மதுபான ஆலை, சென்னை தீநகரில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி, மாமல்லபுரம் பகுதியில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறை நடைபெற்று வருகிறது. எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சவிதா மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வளவு மாணவர் சேர்க்கை நடைபெற்றது மற்றும் அவர்களிடமிருந்து நன்கொடை கட்டணம் எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து முறையான கணக்கு காட்டப்பட்டுள்ளதா? அல்லது வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 


எம்பி ஜெகத்ரட்சகன் தற்போது சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை முதல் வருமானவரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை வேறொரு வருமானவரித்துறை குழு அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


அதில் அவரது கல்வி நிறுவனங்களின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான பல கல்வி நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வளவு மாணவர்கள் சேர்க்கை சேர்க்கப்பட்டது மற்றும் அவர்களிடம் எவ்வளவு நன்கொடை கட்டணம் வசூலிக்கப்பட்டது முறையான கணக்கு காட்டப்பட்டுள்ளதா?. அதற்கு உண்டான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை வருமான வரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அவரது வீட்டில் பின்பக்கம் பாரத் பல்கலைக்கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் அனைத்து பகுதிகளும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் எஸ்ஜேஜே நிறுவனத்தின் அலுவலகமும், பள்ளி ஒன்றின் நிர்வாக அலுவலகமும் அதே முகவரியில் இயங்கி வருகிறது. அந்தப் இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டும் ஜெகத்ரட்சகன் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதுமட்டுமல்லாமல், அவரது இல்லம் மற்றும் அவரது அலுவலகங்களில் ரகசிய அறை உள்ளதா? என்று கோணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் உத்தரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ