சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியை சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த மார்ச் மாதம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை காண சென்றபோது, 40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மைதானத்தில் இலவசமாக சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பறைகளோ அமைக்கப்படவில்லை என்றும், குடிநீர், குளிர் பானங்கள் தின்பண்டங்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, சென்னை காவல் ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் ஆகியோரிடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் அனைத்து பகுதிகளிலும் இலவச குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்ச விலையுடன், சேவை வரியை சேர்த்து விற்பதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி வாதிடப்பட்டது.
இதையடுத்து, அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறும் மனுதாரர் அதற்கான ஆதாரங்களை வழக்குடன் இணைக்கவில்லை என்பதால், நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி சண்முகராஜனின் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். அதேசமயம், கூடுதல் விலைக்கு விற்கபடுவது தொடர்பான குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட உரிய அமைப்பிடம் முன்வைக்கலாம் எனவும் அனுமதி அளித்துள்ளனர்.
உலக கோப்பை 2023
இந்த ஆண்டு உலககோப்பை போட்டிகள் தற்போது இந்தியாவில் தொடங்கி உள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் விளையாடியது. இந்நிலையில், வரும் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளை போலவே இந்த முறையில் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 2500 ரூபாய் மதிப்புள்ள ஒரு டிக்கெட்கள் ரூ.10000 வரை விற்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
2011ல் சென்னை நான்கு போட்டிகளை நடத்தியது. நியூசிலாந்து கென்யாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது, பிறகு இங்கிலாந்து இரண்டு போட்டிகளில் வென்றது (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 ரன்களிலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 18 ரன்களிலும்). வெஸ்ட் இண்டீசை இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆண்டு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலா இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் போட்டிகள்:
அக்டோபர் 8: இந்தியா v ஆஸ்திரேலியா, மதியம் 2 மணி
அக்டோபர் 13: பங்களாதேஷ் v நியூசிலாந்து, பிற்பகல் 2 மணி
அக்டோபர் 18: நியூசிலாந்து v ஆப்கானிஸ்தான், பிற்பகல் 2 மணி
அக்டோபர் 23: ஆப்கானிஸ்தான் v பாகிஸ்தான், பிற்பகல் 2 மணி
அக்டோபர் 27: பாகிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது - மு.க.ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ