திமுக எம்.பி மீதான கொலை வழக்கு - சிபிசிஐடி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி உள்ளிட்டோருக்கு எதிராக கொலை வழக்கை பதிவு செய்து சிபிசிஐடி, விசாரித்து வருகிறது. இந்நிலையில், சிபிசிஐடி முறையாக விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறுவதாகவும், புதிய விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளதாகவும், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டார்.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், முந்திரி நிறுவன தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி புதிய விசாரணை அதிகாரி விசாரணையை தொடரலாம் எனவும், அதை விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. காணிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
ALSO READ கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR