கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும்

கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்; 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், அமைச்சர் எ.வ.வேலு தகவல்

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2021, 03:32 PM IST
  • கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கும்
  • அமைச்சர் எ.வ.வேலு உறுதி
  • 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்
கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் title=

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம்  சிறுவங்கூரில் பகுதியில் சுமார் ₹ 398.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கும் சூழ்நிலையில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

அதற்கு முன்னதாக அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் இறுதி கட்ட கட்டுமானப் பணிகள் குறித்தும். கட்டிடத்தின் தரம் குறித்தும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மருத்துவமனை ஏழு தளங்கள் மற்றும் 700 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, விரிவுரையாளர்கள் பிரிவு, ரத்தவங்கி, மருத்துவக் கிடங்கு, பல் மருத்துவமனை பிரிவு, என விரிவாக கட்டப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆய்வகம், பேராசிரியர்கள் அறை உள்ளிட்ட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களை சந்திததுப் பேசினார்.

READ ALSO | நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை; திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர்

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது என்று  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவகல்லூரி மருத்துவமனையை நேரில் வருகை தந்து திறந்து வைக்க தமிழக முதல்வரை வலியுறுத்த இருப்பதாகவும் முதல்வர் இசைவு தெரிவித்தால் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், பருவமழையால் சேதமடைந்த சாலைகள், மேம்பாலங்களை சீரமைப்பதற்காக, 1443 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு (Finance Allocation) செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதற்கட்டமாக 1152 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

கள்ளக்குறிச்சியில் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்காக நீரை திறந்து வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

READ ALSO | பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News