ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் பெண்ணாக சாதனை படைத்தவர் ஜெ.,: கனிமொழி
பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த திமுக எம்.பி. கனிமொழி புகழாரம்!
பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த திமுக எம்.பி. கனிமொழி புகழாரம்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு உயிரிலாந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், DMK எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்., "அரசியலில் ஒரு பெண்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது. மேலும், அவர் பல சவால்களையும் சாதனைகளாக மாற்றியவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.