திமுக கட்சியின் MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தில் பெய்த மழையால் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு கண்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


தற்போது மாநிலத்தில் தேங்கியிருந்து நீரின் அளவு குறைந்து வருகின்றது, எனினும் வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்டெடுக்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் முதல் வாரம் முதல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் வீட்டிற்கு திரும்புவர் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் நாடுமுழுவதிலும் இருந்து நிராணப் பொருட்கள், நிதி வழங்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தினை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாதாக திமுக சார்பில் 1 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!